பொள்ளாச்சியில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா

பொள்ளாச்சியில், சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது.

பொள்ளாச்சி திருவிழா

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் இன்று தொடங்கியது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் இதைத் தொடங்கி வைத்தார். இதில், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகை தந்துள்ளனர். பொள்ளாச்சி, சக்தி மில்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா வருகின்ற 16-ம் தேதி வரை நடக்கிறது. சுற்றுலாத்துறையின் பிரமாண்ட தேசியக் கொடி வடிவிலான பலூன், 2.0 பலூன், ஆங்கிரி பேர்டு பலூன் ஆகியவை 12 பலூன்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. 

பலூன் திருவிழா

தினசரி, காலை, மாலை என்று இரண்டு வேளைகள் இந்த பலூன் திருவிழா நடைபெறுகிறது. இதில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழா இன்று நடைபெற்றாலும், நாளை முதலே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!