வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (10/01/2018)

கடைசி தொடர்பு:08:13 (11/01/2018)

கல்பாக்கம் அணுஉலையில் தண்ணீர் கசிவு! மின்உற்பத்தி நிறுத்தம்!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செயல்பட்டு வரும் அணுஉலையின் முதல் அலகில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதைச் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணுமின் கழகம் சார்பில் கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரை ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.  இந்தநிலையில், கல்பாக்கம் அணு உலை அலகு 1-ல் குளிர்விக்க பயன்படும் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஜனவரி 8-ம் தேதி இரவு அணுஉலை பழுதடைந்தது. அன்றைய தினம் முதல் அணு உலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, குழாயில் எந்தப் பகுதியில் தண்ணீர் வெளியேறுகிறது எனக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் இருப்பதால் எந்த இடத்தில் கசிவு இருக்கிறது என்பதை சென்சார் மூலம் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கசிவுப் பகுதியைக் கண்டுபிடித்த பிறகு, சரிசெய்யப்பட்டு மீண்டும் அணுஉலை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க