Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்கள், வருவாய்த்துறையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பிற துறையில் அதே நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஊதியக்குழுவின் அடிப்படை ஊதியம் ரூ.9300 வழங்கியதுபோல் இந்த ஊதியக்குழுவிலும் ஊதியம் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிக்கான அனைத்து மாவட்டங்களிலும் துணை ஆட்சியர் நிலையில் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு காவல்துறையைப் போல அரசு விடுமுறை நாள்களில் பணியாற்றும்போது கூடுதல் பணிநேர மதிப்பூதியம் வழங்கிட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு பட்டியலை முறையான நேரத்தில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement