வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (11/01/2018)

கடைசி தொடர்பு:07:41 (11/01/2018)

`தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக மாற்றப்படும்!' – ஆட்சியர் வெங்கடேஷ் நம்பிக்கை

தூத்துக்குடி மாவட்டம் உருளைகுடி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில்  கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஆட்சியர் வெங்கடேஷ், ”தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதாரமான மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு. அதனை பேணிக் காப்பது அனைவரின் கடமை” எனப் பேசினார்.

pongal festival celebrated in thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவுக்குட்பட்ட உருளைகுடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.  உருளைகுடி கிராம பல்நோக்கு மையத்தில்  மரக்கன்றினை நட்டுவிட்டு, சமத்துவப் பொங்கல் விழாவை குத்துவிளக்கேற்றி ஆட்சியர் தொடங்கிவைத்தார். விழாவில் பேசிய அவர், “மனுநீதிநாள் என்பது கடைக்கோடி மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை  அறிந்து பயன்பெற வேண்டும் எனவும், ”மக்களுக்காக மக்களைத் தேடி அரசு” என்ற குறிக்கோளுடனும் ஒவ்வொரு மாதமும் கிராமங்கள்தோறும் மனுநீதிநாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் மக்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். 

pongal festival celebrated in thoothukudi

தூத்துக்குடி மாவட்டத்தை முழுமையான சுகாதாரமான மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு, அதனைப் பேணிக் காப்பது மக்கள் அனைவருடைய கடமை. நீங்கள் முழுப் பொறுப்புடன் செயல்பட்டால்தான் நமது கிராமத்தை, சமுதாயத்தை, முழு வளர்ச்சியடைந்த மற்றும் ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்” என்றார்.  தொடர்ந்து,  பல துறைகளின் சார்பில் 76 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் வெங்கடேஷ், இறுதியாக முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார். மக்களும் ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க