வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (11/01/2018)

கடைசி தொடர்பு:07:26 (11/01/2018)

15-வது நாளாக சிவகாசியில் தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்... கண்டுகொள்ளாத அரசு!

சிவகாசியில் 15-வது நாளாக வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து வரும் பட்டாசு உற்பத்தியாளர்கள், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மத்திய மாநில அரசுகளுக்கு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

தொடரும் சிவகாசி

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டாசு வெடிக்க தடை கோரும் பொதுநல வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், மாசுக் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று, வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தப்  போராட்டத்தால் விருதுநகர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அதைச் சார்ந்து பல தொழில்களும் முடங்கியுள்ளன.

பொங்கல் திருநாள் ஓரிரு நாள்களில் வரவுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தத்தினால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் 15-வது நாளான நேற்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தப்பட்டது. தங்கள் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து வருகிற நாள்களில் தினமொரு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க