ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு கோகயின், நிகோடின் பரிசோதனை!

ல்லிக்கட்டுக் காளைகளுக்கு கோகயின், நிகோடின் பரிசோதனை நடத்த வேண்டுமென இந்திய விலங்குகள் நலவாரியம் புதிய நெறிமுறை வகுத்துள்ளது. ஆனால், இந்த சோதனை நடத்துவது எப்படி என்பதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளை

முன்னதாக, காளைகளுக்கு சாராயம் வழங்கப்பட்டிருக்கிறதா என்று மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. மூச்சு பரிசோதனையில் காளைகளுக்கு மது வழங்கப்பட்டிருந்தால் எளிதாக கண்டறிய முடியும். ஆனால், கோகயின், நிகோடின் போன்ற பரிசோதனைகள் நடத்துவது குறித்து இதுவரை கேள்விப்பட்டதில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் கையை பிசைகின்றனர். புதிய நெறிகாட்டுதல் முறையில் காளைகள், போட்டியில் பங்கேற்பவர்கள், காளை உரிமையாளர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் கண்டிப்பாக தனித்தனியாக இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.  

இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் குப்தா, ''காளைகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும்  இன்ஷூரன்ஸ் கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும். போட்டி நடைபெறும் இடங்களில் எங்கள் குழுவினர் சோதனையில் ஈடுபடுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, காளைகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் என்று தனித்தனியாக இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. காளைகளின் 4 புகைப்படங்களுடன் 500 ரூபாய் டி.டி எடுத்துக் கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். காளை உரிமையாளரின் அடையாள அட்டை ஆகியவை போதுமானதாக இருந்தது.

மதுரை ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் கூறுகையில், ''போட்டி அமைப்பாளர்கள் போட்டியில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் என அனைவருக்கும்  மொத்தமாக இன்ஷூரன்ஸ் செய்துவிடுகின்றனர். ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக காளைகளை இன்ஷூரன்ஸ் செய்வது இயலாத காரியம். ஜல்லிக்கட்டு சமயத்தில் ஒவ்வோர் காளைகளும் தலா 15 போட்டிகளில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு போட்டிக்கும் இன்ஷூரன்ஸ் செய்ய அதிக காலம் பிடிக்கும் வேலை'' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!