`நிச்சயம் மழை வரும்!' - பொங்கல் விழாவில் கலகலத்த பிரேமலதா

சேலம் தாரமங்கலம் பகுதியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மற்றும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்., மோகன்ராஜ், சுபா உட்பட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

 பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழாவில், 1500 பேருக்கு பொங்கல் பொருள்களான அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. விஜயகாந்தும், பிரேமலதாவும் முரசு கொட்டி பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க., மகளிர் அணி தலைவி பிரேமலதா, ''உலக அளவில் வாழும் தமிழர்களின் முக்கிய விழா, பொங்கல். அமெரிக்கா,  ஜனவரி 14-ம் தேதி வரும் தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு பொதுவிடுமுறை அறிவித்தது. நாங்கள் பொங்கல் கொண்டாடக் கூடாது என்று தடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு வெட்கமாக இல்லை. பொங்கலின் வரலாறு பற்றி உங்களுக்குத்  தெரியுமா?

சங்க காலமான மணிமேகலை காலத்தில், காவிரிப்பூம்பட்டினத்தில் முரசு கொட்டி விவசாயத்துக்கு மழைவழங்கிய இந்திரனுக்குப் பொங்கல்வைத்து வழிபட்டார்கள். இன்று நாம் பொங்கல் வைத்ததும் மழை வருகிறது. நிச்சயம் மழை வரும். நாம் கொண்டாடுவது  உண்மையான பொங்கல் விழா. சங்க காலங்களில் பொங்கல் திருவிழா 24 நாள் கொண்டாடப்பட்டது. ஆனால், நாம் தற்போது பெரும்  பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என, 3 நாள்களாக சுருக்கிவிட்டோம். ஆடியில் விதை விதைத்து, தை மாதத்தில் அறுவடைசெய்வதே பொங்கல் திருநாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!