பொங்கலுக்கு தமிழக அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு..! | Tamilnadu government announced Special holiday for Pongal festival

வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (11/01/2018)

கடைசி தொடர்பு:08:36 (11/01/2018)

பொங்கலுக்கு தமிழக அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (12-01-2018) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பொங்கல் திருநாள்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும்பொருட்டும்   ,  மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாசாரத்தையும், பாரம்பர்யத்தையும், பேணிக்காக்கும் அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (12-01-2018) சிறப்பு விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close