காளையை அடக்கவும் ஆதார் கட்டாயம்! - அதிரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Aadhar mandatory for Jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (11/01/2018)

கடைசி தொடர்பு:13:39 (11/01/2018)

காளையை அடக்கவும் ஆதார் கட்டாயம்! - அதிரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் ஆதாரோடு பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.

jallikattu


ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் முறையே பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவின்பேரில் இதற்கான ஆலோசனைக்கூட்டம் வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

aadhar

அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடிவீரர்களுக்கும் காளைகளுக்கும் இன்று முன்பதிவு நடந்து வருகிறது. 12-ம் தேதி காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 20 வயதிலிருந்து 40 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்களின் எடை 50 கிலோ-வாக இருக்க வேண்டும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

டோக்கன் வாங்க வரும் வீரர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும். மாடுகளுக்கு டாக்டர் கொடுத்த சான்றிதழுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஆதார் இல்லாத மாடுபிடி வீரர்கள் இன்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க