வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (11/01/2018)

கடைசி தொடர்பு:14:06 (11/01/2018)

முககவசம் அணிந்து சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்த நடராசன்!

natarasan

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக, சசிகலாவின் கணவர் நடராசன், சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

natrajan


நடராசன், லண்டனிலிருந்து சொகுசு காரை இறக்குமதிசெய்ததில், அரசுக்கு ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிமன்றம், 2010-ம் ஆண்டு நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து, நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றமும் அந்தத் தண்டனையை உறுதிசெய்தது. நடராசன் ஒரு சில மாதங்களுக்கு முன்னர், கல்லீரல் மற்றும் சிறுநீரக அறுவைசிகிச்சை செய்திருந்தார். அதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்து, அங்கு ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் முககவசத்துடன் வந்த நடராசன், சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்துக்குச் சென்று சரணடைந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தநிலையில், தற்போது சற்று ஆரோக்கியமான அவரே, சி.பி.ஐ நீதிமன்றத்துக்குள் நடந்துசென்றார். அவருக்கு, சி.பி.ஐ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.