Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் மறியலில் குதித்தனர்! தீவிரமடையும் பட்டாசுத் தொழிலாளர்கள் போராட்டம்

கடந்த 16 நாள்களாக சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றன. பட்டாசு வெடிக்கத் தடை கோரும் பொதுநல வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்தம்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பட்டாசு ஆலை அதிபர்கள் நடத்திவரும் வேலை  நிறுத்தப் போராட்டத்தால், விருதுநகர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. பொங்கல் திருநாள் வரவுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடுகிறார்கள்.

இந்த நிலையில் கடையடைப்பு, உண்ணாவிரதம் என்று போராடிவந்தவர்கள், 17-வது நாளான இன்று, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மறியலில் இறங்கினார்கள். எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ரயில் மறியலில் இறங்கியதால், செங்கோட்டை ரயில் அரை மணி நேரம் திருத்தங்கலில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அச்சமடைந்தார்கள். பிறகு, காவல்துறையினர் வந்து போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

'பொங்கல் திருநாள் வரவுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வறுமையில் தவிக்கிறோம். இதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய- மாநில அரசுகள் எந்த முயற்சியும் எடுக்காததால், எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளோம். நாளை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம்' என்றனர் தொழிலாளர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement