வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (11/01/2018)

கடைசி தொடர்பு:13:12 (11/01/2018)

மேயர் தேர்வு முறையில் மாற்றம்! - ஜெ. சட்டத்தை புறந்தள்ளினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாநகராட்சி மேயர்களை மக்களே நேரடியாகத் தேர்வுசெய்யும் சட்டத் திருத்த மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

மாநகராட்சி மேயரை மற்றும் நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல்செய்தார். தமிழகத்தில் ஏற்கெனவே இந்தமுறைதான் அமலில்இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா ஆட்சியில்தான் கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து மேயர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது. தற்போது எடப்பாடி அரசு, மக்களே தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல்செய்துள்ளது. கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில், இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.