வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (11/01/2018)

கடைசி தொடர்பு:14:25 (11/01/2018)

'நான் விஷம் குடித்துவிட்டேன்'- மனைவிக்கு போன் செய்து உயிரைவிட்ட பேக்கரி ஓனர்

கடன் தொல்லையால், பேக்கரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                        
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் மேலகுப்பத்தைச் சேர்ந்தவர், சுரேஷ். இவர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பேக்கரி நடத்திவந்தார். மேலும், டூவிலரில் சென்று பல கிராமங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனையும் செய்துவந்தார்.இவருக்கு, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகக் கடன் வாங்கியதால், மன ஊளைச்சலில் இருந்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஆண்டிமடம் பகுதிக்கு வியாபாரத்துக்கு செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

மாலையில் மனைவிக்குபோன்செய்து, விஷம் குடித்துவிட்டதாகக் கூறினாராம். இந்நிலையில், மாலை 3.30 மணியளவில் ஆண்டிமடம் விருத்தாசலம் சாலையில், அழகாபுரம் பிரிவுச் சாலை அருகே மயங்கிக்கிடந்தவரை, அவ்வழியாகச் சென்றவர்கள் ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராசு, என் மகன் கடன் தொல்லையால்தான் இறந்திருக்கிறான் என்று ஆண்டிமடம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பெயரில், எஸ்.ஐ வினோத்கண்ணன் வழக்குப்பதிந்து விசாரித்துவருகிறார்.