Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`தமிழ்நாட்டு'க்கு 50 வயது! - பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு

Chennai: 

தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஜனவரி 14-ம் தேதி பொன்விழா கொண்டாட இருப்பதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

முதல்வர்

 

தமிழ்நாடு, முன்பு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா ஆட்சிக் காலத்தில் 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தமிழ்நாடு என அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதியோடு பெயர் மாற்றம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 110-ம் விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடும்போது, “தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து சென்னை மாகாணம் என்று வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்று 1956-ம் ஆண்டு ஜூலை மாதம் தியாகி சங்கரலிங்கனார் கோரிக்கை வைத்தார். அப்போது காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தது.

அண்ணா தலைமையிலான அரசு அமைந்தபின், சென்னை மாகாணத்துக்குத் `தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாறியது. 

வரலாற்று சிறப்புமிக்க நம் மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதை 'தமிழ்நாடு பொன்விழா' ஆண்டாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement