எய்ம்ஸ் விவகாரம்! மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பது தொடர்பாக பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன . எம்.எல்.ஏ, எம்.பி-க்களும் இது தொடர்பாகக் குரல் கொடுத்துவந்தனர் . இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ,அது தமிழக மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், புத்தாண்டு தினத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றாததால், மத்திய அமைச்சரவைச் செயலர் பிரீத்தி சுதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு,  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!