மஞ்சு விரட்டுப் போட்டி! நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள்

மஞ்சுவிரட்டு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "புதுக்கோட்டைத் திருமயம் தாலுகா பிலிவலம் ஊராட்சியைச் சேர்ந்த ஏனப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய சந்தனக் காப்புத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 21-ம் தேதி ஏனக்கண்மாயில் மஞ்சு விரட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரியும் முதலுதவி சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவை அனுப்பவும் கோரி மனு அளித்த நிலையில், இதுவரை எவ்வித பதிலும் வழங்கவில்லை. ஆகவே, ஜனவரி 21-ல் மஞ்சுவிரட்டு விழா நடத்த அனுமதி வழங்கவும் மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை அனுப்பி வைக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். மஞ்சுவிரட்டு நடந்த குறைந்த நாள்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளைத் தயார் செய்ய அப்பகுதி மக்கள் காத்திருக்கினர். எனவே, இவ்வழக்கு நாளை விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!