Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடி டு கன்னியாகுமரிக்கு விரைவில் பயணிகள் படகுப் போக்குவரத்து!

"தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்துக்கு நீர்வழிப் பாதையில் விரைவில் பயணிகள் படகு போக்குவரத்துத் திட்டம் தொடங்கப்பட உள்ளது" எனத் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக சபை துணைத்தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

Thoothukudi port trust

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 'தக்‌ஷின் பாரத்' சரக்குப் பெட்டக தளத்திலிருந்து 1,000 சரக்குப் பெட்டகக் கொள்ளளவு கொண்ட புதிய கப்பல் சேவையை துறைமுக சபைத் துணைத்தலைவர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்க கிடைத்த அனுமதியின் படி வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாள்கள் மீண்டும் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அத்துடன் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் இடையே நீர்வழிப்பாதையில் பயணிகள் படகுப் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் பயணிகள் படகுப்போக்குவரத்து சேவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக இந்தப் பயணிகள் படகுப் போக்குவரத்தை இயக்க விரும்புபவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது" என்றார்.

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து கொழும்புக்கு கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, 'ஸ்காடியா பிரின்ஸ்' என்ற 9 அடுக்குகள் கொண்ட, 1,200  பயணிகள் அடங்கிய கப்பல்சேவை வாரத்தில் 2 நாள்கள் இயக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக 5 மாதத்திலேயே, கடந்த 2011, நவம்பர் 18ம் தேதி நிறுத்திவைக்கப்பட்டது.

Thoothukudi port trust

இந்நிலையில் தற்போது, மத்திய அரசு தமிழகக் கடலோரப் பகுதிகளில் படகுப் போக்குவரத்து திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து பயணிகள் படகு போக்குவரத்து இயக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக தூத்துக்குடி  -  ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி - கன்னியாகுமரி  - திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு படகுப் போக்குவரத்து இயக்கப்பட உள்ளது. இந்தப் படகு போக்குவரத்தினை இயக்க விரும்புபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் துறைமுகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement