வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (11/01/2018)

கடைசி தொடர்பு:19:50 (11/01/2018)

நாணயம் தயாரிப்பை நிறுத்தியது மத்திய அரசு!

நாணயம் தயாரிக்கும் ஆலைகளில் நடைபெற்று வரும் நாணயத் தயாரிப்புப் பணிகளை நிறுத்த ஆலைகளின் பொது மேலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாணயம்

மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் மத்திய அரசுக்குச் சொந்தமான நாணயத் தயாரிப்பு ஆலைகள் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் நாணயங்கள் ரிசர்வ் வங்கி மூலமாகப் பொது புழக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே, தயாரிக்கப்பட்ட நாணயங்கள் பொது புழக்கத்துக்கு வைக்கப்படாமல் குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் புதிய நாணயங்களை வைப்பதற்கு இடம் இல்லாமல் உள்ளது. இதனால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் பொதுப்புழக்கத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, அந்த அறைகளைக் காலியாக்க வேண்டும் என மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. அதுவரை நாணயத் தயாரிப்பு பணிகளை நிறுத்த வேண்டும் என நாணய தயாரிப்பு ஆலைகளின் பொது மேலாளர்களுக்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், இதுவரை தயாரிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நாணயங்கள் இனி புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க