'அடிக்கடி கோயிலுக்குச் செல்வதை தவிருங்கள்'- வி.ஐ.பி.களுக்கு வெங்கைய நாயுடு அட்வைஸ்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு.

வெங்கைய நாயுடு திருப்பதி தரிசனம்

நேற்று மாலை 6.30 மணிக்கு திருப்பதி வந்த வெங்கைய நாடுயு இரவு திருமலையில் தங்கினார். அதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் நடந்த சுப்ரபாத தரிசனத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவரது மனைவி உஷா, அஷ்டவரதன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். வெங்கைய நாயுடு வருகையையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சுவாமி தரிசனத்திற்கு பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, “இந்து மதம் என்பது மதம் கிடையாது. அது நடைமுறையான வாழ்க்கை. உலகிலேயே பாரத சம்பிரதாயங்கள் மட்டுமே சிறந்ததாக இருக்கிறது. விவேகானந்தர் முதல் ராமானுஜர் வரை இந்த நடைமுறைகளை நமக்குக் கூறியிருக்கிறார்கள். கோயிலுக்கு முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி சென்று வழிபடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பொதுமக்கள் சுவாமியை குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நான் அடிக்கடி கோயிலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொண்டேன். இதேபோல் மற்றவர்களும் குறைத்துக் கொண்டால் பொதுமக்களுக்குத் தொந்தரவு இருக்காது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!