Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈரோடு மலைவாழ் மக்களின் குலைநடுங்கும் பயணம்!

சாதாரண நாள்களிலேயே தமிழக மலை கிராமங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் பொங்கல் பண்டிகை காரணமாக ஈரோடு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். 36 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து சென்று வருவதால் மலைவாழ் மக்கள் பேருந்தின் மேல் தளத்தின் அமர்ந்து செல்லும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தியூரைச் சேர்ந்த பொன்னுசாமி கூறுகையில், ''ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவுக்குட்பட்ட மேற்குதொடர்ச்சி மலை பகுதியிகளில் 100-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாமல் இருக்கிறது. பர்கூர் ஊராட்சியில் மட்டும் 36 கிராமங்கள் இருக்கின்றன. அங்கு வாழும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கும், மலை வாழ் மக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களையும், அங்கு விளையும் பொருள்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அந்தியூருக்குத்தான் வரவேண்டும்.

சாதாரண நாள்களில் காலை 5:00, 10:00, மதியம் 3:00 மணிக்கு மட்டுமே பஸ் போக்குவரத்து இருக்கும். தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 2 முறை மட்டுமே பேருந்து 36 மலை கிராமங்களுக்கும் சென்று வருகிறது. அதனால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்து மேல் தளத்தில் பள்ளிக் குழந்தைகளும், முதியோரும் அமர வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

அவர்கள் பயணிக்கும் மலைச் சாலை குறுகிய வளைவுகளும், அடர்த்தியான மரங்களும், வன விலங்குகளும் நிறைந்தது. இவை அனைத்தையும் விட அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அந்தப் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருப்பதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். பேருந்தின் மேல் முதியவர்களும், குழந்தைகளும் அமர்ந்து செல்லும் போது குலை நடுங்குகிறது'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement