வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (12/01/2018)

கடைசி தொடர்பு:07:30 (12/01/2018)

காணும் பொங்கலன்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்! - நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு இடம் வண்டலூர் உயிரியல் பூங்கா. வார விடுமுறை நாள்கள் மற்றும் பொது விடுமுறை நாள்களில் வண்டலூர் பூங்காவுக்கு அதிக அளவில் மக்கள் வந்துசெல்வர். அதனால், விடுமுறை தினம் தவிர்த்து, அதற்குப் பதிலாக செவ்வாய்தோறும் வார விடுறை அளிப்பார்கள். விலங்குகள் ஓய்வெடுப்பதற்காகவும், பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காகவும் இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது.

வண்டலூர் வனவியல் உயிரியல் பூங்கா

விடுமுறை தினங்களில் சுமார் பத்தாயிரம் பேர் வண்டலூர் பூங்காவுக்கு வருகிறார்கள். குறிப்பாக புத்தாண்டு, காணும் பொங்கல் போன்ற நாள்களில் அதைவிட அதிக அளவில் பூங்காவுக்கு மக்கள் வருகிறார்கள். இதனால் 16.01.18 (செவ்வாய் கிழமை) அன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கம் போல பூங்கா திறந்திருக்கும். அன்று அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால், அன்றைய தினம் மட்டும் காலை 8 மணிக்கே பூங்கா திறக்கப்படும். இதற்காக 30 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க நுழைவுச் சீட்டுகள் மற்றும் பூங்காவின் இதர வசதிகளை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.” என வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க