வெளியிடப்பட்ட நேரம்: 23:21 (11/01/2018)

கடைசி தொடர்பு:07:28 (12/01/2018)

மூன்று மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு ஏதுவாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு

இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், `சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களில் இருந்து வந்து மேற்படி மூன்று மாவட்டங்களில் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, அவர்கள் சொந்த ஊருக்கு தகுந்த நேரத்தில் சென்றடைந்து அவரவர் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சீறிய முறையில் கொண்டாடும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சிறப்பு நிகழ்வாக, 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாள்கள்) சட்டம், பிரிவு  3(2)-ன் கீழ் நாளை மட்டும் விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.