வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:07:26 (12/01/2018)

புதிதாக அரசு ஊழியர்களை நியமிக்கத் தடை; புதுச்சேரி நிதித்துறை உத்தரவு

புதுச்சேரி அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதன் காரணமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்குக்கூட சம்பளம் போட முடியாத சூழல் நிலவி வருகின்றது. கடுமையான இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக 7 பக்கங்களைக் கொண்ட பல்வேறு உத்தரவுகளை புதுச்சேரி அரசுக்கு பிறப்பித்திருக்கிறது புதுச்சேரி நிதித்துறை.

புதுச்சேரி

அதன் முக்கிய அம்சங்கள்:

அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தின்படி ஆள்களை நேரடியாக நியமிக்கக்கூடாது. பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவைகளுக்கு வேறு துறைகளில் இருந்து டெபுடேஷன் போன்ற முறையில் நிரப்பிக் கொள்ளலாம். அதேபோல் துறைகளில் கூடுதலாக இருக்கும் ஆள்களைக் கொண்டு காலியிடங்களில் நிரப்பவேண்டும். அதிக பணியாளர்கள் இருந்தால் குறிப்பிட்ட திட்டங்களில் பணியமர்த்தலாம். வழக்கமான அதிகாரபூர்வ பணிக்காக ஊழியர்களுக்கான வவுச்சர் கட்டணத்தை தடுக்க துறை முயன்றுள்ளது. கருத்தரங்குகளையும் கூட்டங்களையும் ஹோட்டல்களில் நடத்தக்கூடாது. விமானப்பயணத்தை பொருத்தவரை அதிகாரிகள் எக்னாமிக் பிரிவில்தான் பயணிக்க வேண்டும். விமான வலைத்தளத்தில் இருந்து விமான பயண டிக்கெட்டை குறைந்த விலையில் பதிவு செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களின் செலவுகளை 10 சதவிகிதம் குறைக்க வேண்டும். தொலைபேசி கட்டணம், எரிபொருள் செலவு, டீ, காபி செலவு ஆகியவையும் அதில் அடங்கும். அதேபோல் புதிய வாகனங்களையும் வாங்கக்கூடாது. அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற பயன்பாட்டு வாகனங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை. வாகனங்களுக்குப் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவைகளை பெருமளவு மிச்சப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் பயன்படுத்தக் கூடிய வாகனங்களை அலுவலகத்திலேயே நிறுத்தி வைக்க வேண்டும்.

வாகனங்களை வெளியில் இருந்து வாடகைக்கு எடுக்கக் கூடாது. அலுவலகக் கட்டத்தின் அருகேயே வாகனங்களை நிறுத்த வேண்டும். எந்த சூழலிலும் வாகனங்களை ஒட்டுநர்கள் அவர்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. மின்சாரம் பயன்படுத்துவதற்கான செலவீனம் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொது கட்டடங்கள் மூலம் குறைந்தபட்சம் 5 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும். இதன்மூலம் நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பணிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துகிறது. வேலைகள், திட்டங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்கான எந்தவொரு விருதுகளும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் நிர்வாக ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்படாத பொருள்களின் மீது புதிய கடமைகள் செய்யப்பட மாட்டாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க