வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (12/01/2018)

கடைசி தொடர்பு:08:59 (12/01/2018)

நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு! - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை
 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, சற்று வலு குறைந்து இலங்கை, மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டது. இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வலுவிழந்துவிட்டது. வங்கக்கடலில் வடகிழக்குத் திசையில் இருந்து ஈரப்பதமான காற்று காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பருவக் காற்றில் வேக மாறுபாடு காரணமாக அடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க