வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (12/01/2018)

கடைசி தொடர்பு:09:32 (12/01/2018)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்! - முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

மதுரையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் முறையே பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.  

jallikattu
 

அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடிவீரர்களுக்கும் காளைகளுக்கும் நேற்று முன்பதிவு நடந்தது.12-ம் தேதி காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படும். அதேபோன்று 16-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுக்கு இன்று முன்பதிவு நடக்கிறது. 13-ம் தேதி காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படும்.

இந்நிலையில், வரும்  16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வமும் பங்கேற்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க