வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (12/01/2018)

கடைசி தொடர்பு:11:46 (12/01/2018)

`ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்க முடியாது..!' செல்லூர் ராஜூ உறுதி

விலைவாசி உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்க இயலாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில், பேசிய சென்னை முன்னாள் மேயரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்ரமணியன், பள்ளிப்பட்டு பகுதியில் ரேஷன் கடை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ``172 வது வார்டு பள்ளிப்பட்டு, பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் இடம் தேர்வு தந்தால் புதிய ரேஷன் கடை திறக்கப்படும்'' என்றார். ரேஷன் கடையில், உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்க வேண்டும் என்று மா.சுப்ரமணியன் கோரிக்கைவிடுத்தார். அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, `விலைவாசி உயர்ந்துவிட்டதால் உளுத்தம் பருப்பு ரேஷன் கடைகளில் வழங்க முடியாது' என்று தெரிவித்தார்.