வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:14:00 (12/01/2018)

பருவமழையால் காஞ்சிபுரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை காரணமாக காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நிர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த 2016-ல் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவியது. அதைத் தொடர்ந்து இந்த வருடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழை ஓரளவு இயல்பாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் பருவமழை

பொதுவாக தென்மேற்குப் பருவ மழையின்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழையின் அளவு மிகக் குறைவாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை இயல்பான அளவு மழை பெய்தது. ஆனால், கடும் வறட்சி காரணமாக அவை நீண்ட நாள்கள் நிலப்பரப்பில் தேங்கவில்லை. இதைத்தொடர்ந்து அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் வரை பெய்தது.

இயல்பாகப் பெய்யக்கூடிய அளவை (59.7 செமீ)விட சற்று குறைவான அளவே (57.1 செ.மீ) பெய்தது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர்வரத்து ஓரளவுக்கு உயர்ந்தது. கடந்த ஆறு மாதங்களில் 5.77 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.93 மீட்டர் அளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டாரங்களில் தொழிற்சாலைகள் அதிகம் என்பதால், இந்த நீர்மட்டம் விரைவாக குறைந்துவிடும். அதனால் இந்தக் கோடையை தண்ணீர் பிரச்னை இல்லாமல் சமாளித்துவிடலாம் என நம்பப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க