முதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள்...! புள்ளிவிவரத்துடன் பதிலளித்த பழனிசாமி

முதல்வராக பதவியேற்ற பிறகு,  தான் கையெழுத்திட்ட கோப்புகள் எத்தனையென்று முதல்வர் பழனிசாமி புள்ளி விவரத்துடன் பதில் அளித்தார்.

பழனிசாமி

 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பல்வேறு பிரச்னைகளுக்கு எனது தலைமையிலான அரசு உடனடி தீர்வை ஏற்படுத்தித் தந்துள்ளது. உடனுக்குடனான நடவடிக்கைகளால் எந்தக் கோப்பும் தேக்கம் அடைவதில்லை. முதல்வரான பிறகு 4,903 கோப்புகளில் கையெழுத்துப் போட்டுள்ளேன்.

ஒகி புயல் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக எடுத்ததால் குமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளோம். 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

முதல்வர் மேலும் பேசும்போது, “சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!