ஓட்டுக்குப் பணம் வாங்கினால் வாக்களிக்கத் தடைகோரிய வழக்கு..! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

hc

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், அப்பகுதியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், தேர்தல் விதிமுறை மீறல்களைத் தடுப்பது குறித்து பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவில், "தேர்தலுக்காக அரசு அதிக அளவு செலவிடுகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது தேர்தல் பாதியில் நின்றால் அந்தப் பணத்தை வேட்பாளர்களே ஏற்க வேண்டும். தேர்தல் சமயத்தில் பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும் அதைப் பெறும் வாக்காளர்கள் கண்டறியப்பட்டால் அவர்களைத் தண்டிக்கும் விதமாகத் தேர்தல் ஆணையம் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடவோ வாக்களிக்கவோ அனுமதி அளிக்கக் கூடாது.

மேலும், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!