வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:19:00 (12/01/2018)

கிராமங்களில் களைகட்டிய பொங்கல் சந்தைகள்..!

பொங்கல் திருவிழாவில் முக்கிய இடம் பிடிக்கும் புதுப் பானை, புது அரிசி, கரும்பு, மஞ்சள், பூசணி, வாழை, வெல்லம், ஆடு, கோழிகளை வாங்கவும் விற்கவும் பெரும் வர்த்தக மையமாக விளங்கும் கிராமச் சந்தைகள் களைகட்டியுள்ளன.

பொங்கல் சந்தை ஆடுகள்

கோழி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, குந்தாரப்பள்ளி வாரச் சந்தைகள் தமிழக அளவில் பிரபலமானவை. இங்கு விவசாயிகளே நேரடியாகப் புதியதாக விளைந்த அரிசி, ராகி, சோளம், மொச்சை, பாசிப் பயறு, தட்டைப் பயறு, துவரம் பருப்பு உள்ளிட்ட பயிர் வகைகளை விற்பனை செய்வதால் ஓர் ஆண்டுக்குத் தேவையான பயிர் வகைகளைப் பொதுமக்களும் வணிகர்களும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்வது வழக்கம். 

வண்ண வண்ண மாட்டு கயிறுகள்

கயிறு

இந்த வாரம் பொங்கல் சந்தை என்பதால் புதுப் பானைகள், கரும்பு, மஞ்சள், பூசணி, வாழை, புது வெல்லம் இது தவிர மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்கத் தேவையான விதவிதமான வண்ணப் பொடிகள், கழுத்து மணிகள், மாடுகளுக்குத் தேவையான வண்ண வண்ணக் கயிறு வகைகள் 40 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை செய்துள்ளனர். 

மணிகள்

இது மட்டுமல்லாமல் கரிநாள் அன்று உள்ளூர் தெய்வங்களுக்குப் பலியிட ஆடு, கோழிகள் ஆயிரக் கணக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தரமான நாட்டுக் கோழிகள் 400 ரூபாய் முதலும், சண்டைக் கோழி என்றால் 4,000 ரூபாய் வரையும் விற்பனையாகியுள்ளன. ஒரே ஒரு வெள்ளாட்டுக் கிடாய் மட்டும் குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் 18,000 விற்பனையாகி உள்ளூர் வியாபாரிகளை அசத்தியுள்ளது. இந்த வாரம் பொங்கல் சந்தையில் 5 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழர்களின் பொங்கல் விழா கிராம சந்தைகளில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது காண முடிகின்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க