வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (12/01/2018)

கடைசி தொடர்பு:17:20 (12/01/2018)

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர், துணை முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மரியாதை

 
இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆளுநர் உரை மீது முதல்வர் நன்றி தெரிவித்துப் பேசும் தினத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை விடுத்தது. அது ஏற்கப்படவில்லை. தி.மு.க வெளிநடப்பு செய்தது. 

பழனிசாமிஅதன் பின்னர், ஜனவரி 12-ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அத்தோடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. தமிழக சட்டப்பேரவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

ஓ.பன்னீர்செல்வம்


கூட்டத்தொடர் முடிந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று மாலை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். அந்த சமாதியில் இருவரும் மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் எம்.ஜி.ஆர் சமாதியிலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.