பட்டாசுத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்..!

பட்டாசு தொழிலுக்குத் தடை ஏற்படுத்தும் வழக்குகளை உடனே முடிவுக்கு கொண்டு வரவும், வேலை நிறுத்தத்தால் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள் திரண்டு வந்து முறையிட்டனர். 

கலெகடர் அலுவலகம் முற்றுகை

சிவகாசியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் கடந்த 17 நாள்களாகப் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கானத் தொழிலாளர் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகின்றன. மத்திய, மாநில அரசுகள் இவர்களின் கோரிக்கைக்கு உத்தரவாதமான பதிலைக் கூறாததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. உண்ணாவிரதம், கடையடைப்பு என்று போராடி வந்த பட்டாசுத் தொழிலாளர்கள் நேற்று ரயில் மறியல் செய்தார்கள். இன்று பெருந்திரளாக விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்குப் பேரணியாக வந்தனர்.

சிவகாசி வட்டார பட்டாசு, தீப்பெட்டி தொழிலார்கள், "தங்கள் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும், சுற்றுச்சூழல் விதியைத் திருத்தம் செய்ய வேண்டும். ஆலைகள் மூடப்பட்டு வேலை வாய்ப்பில்லாததால் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்து மனு அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!