ரஜினிகாந்த் பெற்றோர் கிராமத்தில் பொங்கல் விழா வைத்து அசத்திய ரஜினி ரசிகர்கள்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தவுடனே அவரது பெற்றோர்கள் பிறந்த ஊராகக் கூறப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள நாச்சிக்குப்பம் கிராமம் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இந்நிலையில், அவரின் ரசிகர்கள் அங்கு பொங்கல் விழா கொண்டாடி அசத்தியுள்ளனர். 

ரஜினிகாந்த் பெற்றோர் ஊர்

நாச்சிக்குப்பம் கிராமத்தில் ரஜினிகாந்தின் பெற்றோரின் நினைவிடம் அமைக்க வாங்கப்பட்டுள்ள இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆன்மிக அரசியலை உணர்த்தும் விதமாகப் பொங்கல் விழாவை கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் மதியழகன் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் நாச்சிக்குப்பம் கிராம பொதுமக்களும், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிலத்தில் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடி அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

உறுதிமொழி

 

இறுதியாக ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலின்படி ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைத் தவிர்த்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை மாவட்ட தலைவர் மதியழகன் படிக்க அதைத் திரும்பச் சொல்லி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், நாச்சிக்குப்பம் மக்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். ரஜினி மக்கள் மன்றம் நாச்சிகுப்பத்தில் நடத்திய பொங்கல் விழாவில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!