நட்புவேண்டி இப்படியும் ஒரு பொங்கல் விழா... போலீஸ் எடுத்த வித்தியாச முயற்சி! 

மதுரை மேலூரில் டி.எஸ்.பி சக்கரவர்த்தி தலைமையில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கு இடையே நல்ல நட்பை வளர்க்கவும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளை குறைக்கவும் நல்லுறவு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் போலீஸாரும் பொதுமக்களுக்கும் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இந்த கொண்டாட்த்தின் போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள மைதானத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

 

கொண்டாட்டத்தையடுத்து டி.எஸ்.பி சக்கரவர்த்தி பேசியதாவது, `பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் எப்போதும் நல்ல நட்புறவு இருக்க வேண்டும். அப்போதுதான் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை எளிதாக இனம் கண்டறிந்து சட்ட ரீதியாக தண்டனை வழங்க முடியும். வாகன ஓட்டுநர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட்டை கண்டிப்பாக அணிந்து போக்குவரத்து விதிகளின்படி வாகனம் ஓட்டினால் காவல்துறையினருக்கு பயப்படத் தேவையில்லை. தவறுகளை கண்டிப்பாக காவல்துறையினருக்கு ரகசியமாக தெரியப்படுத்த வேண்டும். நமக்கு என்னவென்று அலட்சியம் கொள்ளக்கூடாது. சமூக அமைதியைப் பேணுவது என்பது நமது கடமை. இந்த பொங்கல் விழா மூலம் மேலூர் பகுதில் வாழ் மக்களை சந்திப்பது பெறும் மகிழ்ச்சியடைகிறேன். உடல் திறனை மேம்படுத்தி தமிழகத்திற்கும் நமது வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் அளவிற்கு விளையாட்டுத் துறையிலும் கல்வியிலும் இளம் தலைபமுறையினர்  வளர வேண்டும். பொங்கல் விழாவை மிக சந்தோஷமாக கொண்டாட வேண்டும். போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கும் நபர்கள் அதில் இருந்துவிடுபட வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி மீட்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!