`தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக்க சட்டம் இயற்றப்படும்!' - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

காஞ்சிபுரம், ஆதனூரில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டார் தி.மு.க-வின் செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். மக்களோடு சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடிய பின்னர் அவர் சிறப்புரையாற்றினார்.

பொங்கல் விழாவில் ஸ்டாலின்

அந்த உரையின்போது, ``தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டம் இயற்றப்படும். தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தரம் தாழ்ந்து, கவிஞர் வைரமுத்துமீது தாக்குதல் தொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டுமே இருக்க முடியும். அதைவிடுத்து, அநாகரிகத்துக்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் நம் மண்ணில் இடமில்லை. ஆட்சியில் தொடர்ந்து எப்படி இருப்பது என்பதுதான் அ.தி.மு.க அரசின் கவலையாக உள்ளது. மக்களின் பிரச்னைகள்குறித்து அவர்களுக்கு துளியும் வருத்தம் இல்லை. மிக விரைவில் சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும்'' என்று உறுதிபட பேசினார். 
 

உரையாற்றிய ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!