`மௌனம் காப்பதால்தான் இப்படிப் பேசுகிறார்!' - ஹெச்.ராஜாவைச் சாடும் திருமாவளவன்

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். ராஜா எதிர்வினையை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், `மௌனம் காப்பதால்தான் ஹெச்.ராஜா தொடர்ந்து இப்படிப் பேசி வருகிறார்' என்று கருத்துக் கூறியுள்ளார்.

திருமாவளவன்


இதுகுறித்து அவர் மேலும், `அரசியல் கட்சித் தலைவர்கள் மௌனம் காப்பதால்தான் ஹெச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். ஹெச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழகத்தில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது' என்று கறாராக விமர்சித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!