சென்னையை சூழ்ந்த புகைமூட்டம்! - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் இன்று அதிகாலை பனிமூட்டத்துடன் கடுமையான புகைமூட்டமும் சூழ்ந்தது. இதனால் ரயில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

smog
அண்ணாசாலை 

இன்று போகி பண்டிகையையொட்டி சென்னையில் ஆங்காங்கே பழைய பொருள்களை வீட்டின் முன்பும் சாலையோரத்திலும் கொளுத்தினர். இதனால் மெரினா, திருவொற்றியூர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் பனிமூட்டத்துடன் புகைமூட்டம் சூழ்ந்தது. சாலையில் எதிரில் வருபவர்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கரும் புகை சூழ்ந்தது. சில இடங்களில் மக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர்.  8 மணியளவில் கூட இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓட்டுபவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இதுகுறித்து மாசுக் கட்டுபாட்டு வாரியம் ஆய்வு நடத்திவருகிறது. 

smog

சென்னை விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இதனால் அவை பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. இதையடுத்து, சென்னையில் 15 இடங்களில்  காற்றின் தரம்குறித்து ஆய்வு நடத்திவருவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  தெரிவித்துள்ளது. திருவல்லிக்கேணி, தியாகராயநகர், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மணிநேரம் வரை புகைமூட்டம் நீடிக்கும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!