மாணவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகர காவல்துறை! பாராட்டு குவிகிறது | Madurai City Police keep Closeness with students

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/01/2018)

கடைசி தொடர்பு:18:40 (13/01/2018)

மாணவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகர காவல்துறை! பாராட்டு குவிகிறது

அரசுப்பள்ளி மாணவர்களை சர்க்கஸ் பார்க்க அழைத்து சென்று ஏழைப்பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் செயலை சத்தமில்லாமல் செய்து, உயர்ந்து நிற்கிறது மதுரை மாநகர காவல்துறை.

மாநகர காவல்துறையின்

மதுரை மாநகர காவல்துறை பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஒவ்வொரு பகுதியிலும், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதில் மக்களை பங்கு பெற வைத்தவர்கள், கடந்த சில நாட்களாக மதுரையில் நடந்து வரும் சர்க்கஸ் நிகழ்ச்சியைக் காண அரசுப்பள்ளி மாணவர்களை அழைத்து சென்று வருகிறார்கள். மதுரையிலுள்ள குறிப்பிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் 100 பேரை காவல்துறை வாகனங்கள் மூலம் அழைத்து சென்று அய்யர் பங்களாவில் நடந்து வரும் பிரபல சர்க்கஸை காண வைக்கிறார்கள்

அதற்குண்டான கட்டணத்தை காவல்துறையினரே செலுத்துகிறார்கள். மாணவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்குகிறார்கள். அது மட்டுமில்லாமல் மாணவர்களுடன் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணை கமிஷனர் சசி மோகன் மற்றும் இன்ஸ்பெக்டர்களும் அமர்ந்து சர்க்கஸ் பார்த்தார்கள்.

பிறகு அவர்களுடன் கலந்துரையாடி போலீஸ் மீதான பயத்தைப் போக்கவும், அவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் போலீஸாரை எப்படி தொடர்பு கொள்வதென்பது பற்றியும், அவர்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் குற்றங்களை அவர்களின் பெற்றோர் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் கற்றுக் கொடுத்தார்கள்.போலீஸாரின் இந்தச் செயலால் பொருளாதார வசதியில்லாத மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close