கண்மாய்க்கு பட்டா வழங்கிய தாசில்தார்,சர்வேயர் சஸ்பெண்ட் !

கண்மாய்க்கு பட்டா வழங்கிய தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் வருவாய்துறைக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வட்டாட்சியராகப் பணிபுரிந்தவர்  கி.மகேந்திரன். இவர் தற்போது சிவகங்கை கோட்ட ஆய அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.  இவர் 2016 ஆம் ஆண்டு காளையார்கோவில் வட்டாட்சியராகப் பணிபுரிந்த போது காளையார் கோவில் வட்டம் சோமநாதமங்கலம் கிராமத்தில் உள்ள (சர்வே நம்பர் 22)   "கற்புரவள்ளி யேந்தல் கண்மாய்' அரசு புறம்போக்கு நிலத்தில்  சுமார் 17 ஏக்கரை முறைகேடாக லோகநாதன் என்பவருக்கு பட்டா வழங்கியுள்ளார்.

இதற்கு கைமாறாக பல லட்சங்கள் கைமாறியதாக சொல்லப்படுகிறது. பட்டா வாங்கிய லோகநாதன் என்பவர் இதுவரை கிராம கணக்குகளில் பட்டா விவரம்  ஏற்றப்படவில்லையென்று சொல்லி மதுரை  நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றார். இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் லதா அரசுப் புறம்போக்கு நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கிய காரணத்திற்காக, முன்னாள் காளையார்கோவில் வட்டாட்சியர் கி,மகேந்திரன் மற்றும் தலைமை நில அளவையர்  ஜெய்சங்கர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர் மேலும் இது போன்று பல புறம்போக்கு நிலங்களுக்கு  பட்டா வழங்கியிருக்கிறாரா ? என்கிற கோணத்திலும் ஆட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!