ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை..! காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை

கடந்த மூன்று நாட்களாக மதுரையில் நடைபெற்று வந்த நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஜல்லிக்கட்டு கலவர விசாரணை நேற்றுடன் முடிந்தது.

காவல்துறை

2017 ஆம் ஆண்டு மதுரை, சென்னை,கோவை,திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க தமிழக அரசால்,  விசாரணை  ஆணையம் அமைக்கப்பட்டது.  மதுரையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இரண்டாம் கட்ட விசாரணை கடந்த மூன்று நாட்கள் நடந்த பின்பு விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்  செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 996 பேர் பிராமண பாத்திரம் தாக்கல் செய்து உள்ளார்கள், இரண்டு கட்ட விசாரணையில் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டது, அதில் 41 பேர் விசாரணைக்கு வந்துள்ளனர். அவர்களிடம்விசாரணை நடைபெற்றுள்ளது,  விசாரணையை விரைந்து முடிக்க பிப்ரவரி 28, மார்ச் 1,2 மற்றும் மார்ச் மாதத்தில் மீண்டும்விசாரணை நடத்தப்படும்.

மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய அளவில் நடைபெற்றதால் சாட்சிகள் மிக ஆர்வமாக தகவல்களை கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக பிராமண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படும், விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கைத் தாக்கல் செய்ய ஓராண்டுக்கு மேலாகும். இதுவரை நடைபெற்ற விசாரணையில் காவல்துறைக்கு ஆதரவாகவும் எதிராகவும் தகவல்கள் கூறியுள்ளனர். சேலத்தில் விசாரணை நிறைவுபெற்றது. விரைவில் காவல்துறை  உயர் அதிகாரிகளை ஆணையம் நேரில் அழைத்து விசாரிக்கும்" எனக் கூறினார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!