வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:23:00 (13/01/2018)

`தவறாக புரிந்துகொள்ளாதீர்... என் மனம் துடிக்கிறது!' - வைரமுத்து விளக்கம்

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து.

வைரமுத்து

அந்த அறிக்கையில், `தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பரப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று. குறிப்பாக, என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நின்னைகிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

விளக்க அறிக்கை