திருச்சியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது... போலீஸ் அதிரடி!

திருச்சியில் லாட்டரி விற்பனையில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வெள்ளயக்கோன்பட்டியைச் சேர்ந்த நடராஜன் மகன் சீனிவாசன். திருச்சி  உறையூர் வாத்துக்கார தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜேஷ் கண்ணன். திருச்சி  உறையூர் பகுதியில் உள்ள நவாப் தோட்டம் எம்.ஆர்.ஜி பில்டிங் அருகே கடந்த 5-ம் தேதி காலை தனக்கு விழுந்த லாட்டரி சீட்டு பரிசு பணத்தை சீனிவாசன் கேட்டதற்கு தன்னை கத்தியை காட்டி மிரட்டி தன்னிடமிருந்த ரூ.1600 பணத்தை பறித்தும், கொலை செய்ய முயற்சித்ததாக ராஜேஷ் கண்ணன் மீது உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்தனர். அதில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீஸார் ராஜேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லாட்டரிஇதேபோல் ஒரு வழக்கில் உறையூர் நவாப் தோட்டத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் செட்டியார் என்கிற ராதாகிருஷ்ணன் என்பவர்  கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது உறையூர் காவல் நிலையத்தில்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரும் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்படக்கூடாது என்றும், அதை தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அறிக்கை சமர்பித்தார். இதையடுத்து, அமல்ராஜ் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய  உத்தரவிட்டார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!