வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:07:00 (14/01/2018)

ஜனவரி 26 முதல் திருச்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: திருச்சி மாநகராட்சி அறிவிப்பு!

ஜனவரி 26 முதல் திருச்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கவும், விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிட்டு வருவதாக திருச்சி மாநகராட்சி அறித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையர்இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன், “திருச்சி மாநகராட்சி  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மறு சுழற்சி செய்ய இல்லாத பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகப்படுத்துவதை தடுக்கவும், மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருள்களை அழிக்கவும் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்  2016ல் திருத்தம் மேற்கொண்டு வரும் 26-ம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகள், ஒருமுறை பயன்படுத்தும்  டீக்கப்கள், தெர்மாகூழ்  கப்கள், தட்டுக்கள் போன்றவை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவற்றை பயன்படுத்துவது தடைசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 50 மைக்ரனுக்கு மேல் மறு சுழற்சிக்கு பயன்படுகின்ற பிளாஸ்டிக் கேரி பேக்குகள் விற்பனை செய்தல்,  பயன்படுத்துதல், சேமித்து வைத்தல் போன்றவைகளுக்கு பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் 2016ல் அறிவுறுத்தியவாறு தங்களது கடைகளுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் மாதம் ரூ.4000/- வீதம் வருடத்திற்கு ரூ.48,000/- வீதம் மாநகராட்சியில் செலுத்தி பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.   தவறும் பட்சத்தில் கேரி பேக்குகள் பறிமுதல் செய்தும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ல் உருவாக்கப்பட்ட துணை விதிகளில் பிரசுரிக்கப்பட்ட அபராதத் தொகை வசூல் செய்யப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே 2-ம் தேதி அனைத்து மளிகைக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.   அந்தக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது குறித்து மளிகைக்கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்து  திருச்சியில் உள்ள இனிப்பகங்கள், பேக்கரிகளின் உரிமையாளர்கள், மற்றும் ஜவுளிக் கடை சாலையோரக் வியாபாரிகள், மீன் இறைச்சிக்கடை உள்ளிட்ட கடை உரிமையாளர்களிடையே ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்  பிளாஸ்டிக் விற்பனையாளர்களுடன் வரும் 18ம் தேதியும், பிளாஸ்டிக் விற்பனையாளர் சங்க பிரதிநிதிகளுடனும், ஹோட்டல் உரிமையாளர்களுடன் அடுத்தடுத்த தினங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த இம்மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என்றார்.

வரும் 26-ம் தேதிமுதல் திருச்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் முதலிடம் பிடிக்கும் அனைத்து முயற்சிகளையும் திருச்சி மாநகராட்சி எடுத்து வருகிறது.  

         

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க