திருச்சி அருகே மதிப்பிழக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... நான்கு பேர் கைது!

திருச்சி அருகே காரில் கடத்திய 1 கோடி ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பழைய ரூபாய் நோட்டு திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாகச் சென்ற இரண்டு கார்களை நிறுத்தி, சோதனையிட்டபோது,  கார்களில் மதிப்பிழக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இவர்கள் காரில் துறையூர் வழியாக சேலத்துக்கு பணத்தை எடுத்துச் செல்வது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உப்பிலியபுரம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் முசிறி டி.எஸ்.பி புகழேந்தி தலைமையிலான  போலீஸார்  ரூபாய் நோட்டுகள் கடத்திய சேலத்தைச் சேர்ந்த 4 பேரையும் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் எதற்காக இந்த ரூபாய் நோட்டுகள் கடத்தப்பட்டது என்றும், இது எங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும்.

திருச்சி சோழராஜபுரம் வாத்துக்காரத்தெரு பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பழைய ரூ.1000 நோட்டுக்கள் துண்டு துண்டாக கிழித்துக் கிடந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதுபோல் இந்த சம்பவத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை கடத்தியவர்களை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாலும் திருச்சியில் கோடிக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதாலும் பெரும்பரபரப்பு உண்டாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!