வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (14/01/2018)

கடைசி தொடர்பு:09:00 (14/01/2018)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் துள்ளிவரும் காளைகள்!

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட வாடிவாசல் அருகே கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, விழாக்குழுவினர், ஊர்காரர்கள், கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட அரசுத்துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர்தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதி மொழி எடுத்தவுடன்முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து வரிசையாக காளைகள் அவிழ்க்கப்பட்டு ஓடின. அதைத்துரத்திக்கொண்டு காளையர்கள் ஓடினார்கள்.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டது. சோதனைகளைக் கடந்து 954 காளைைகளும், 623 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் போலபோராட்ட சூழல் இல்லாமல் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடுமையான விதிகள் விதிக்கப்பட்டது ஓரளவு சரிதான் என்றாலும் இராணுவத்துக்கு ஆள் எடுப்பதுபோல் ஐம்பது கிலோவுக்கு மேல் உடல் எடை இருக்கனும், உயரம் அதிகமாக இருக்கனும், உடம்பில் தழும்பு இருக்க கூடாது என்பது போன்ற க நிபந்தனைகளால், பல மாடுபிடி வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். 

பல வருடம் மாடுபிடித்த வீரர்களுக்கு இந்த முறையற்ற விதிகளினால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் ஒரு மணி நேரம் அதிகப்படுத்தியிருந்தாலும், காலை ஏழு மணி முதல் மாலை 3 மணிவரை குறிப்பிட்ட அளவுதான் காளைகளை விட முடியும் என்றனர்.  ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டன. அதுபோல் மாடுபிடி வீரர்களும் ஆயிரக்கணக்கில் பதிவு செய்தனர். இந்த கூட்டத்தை குறைக்கவே பல்வேறு விதிகளை புகுத்தியுள்ளதாக  கூற்ப்படுகிறது.

அதேநேரம் பொதுமக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த வருடம் போல பிரச்சினை ஏதுமில்லாமல் நடக்கவிருப்பதால் மதுரை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் காளைகளைப்போல துள்ளி குதிக்கிறார்கள். நாளைய தினம் பாலமேட்டு ஜல்லிக்கட்டை துணை முதலமைச்சர்ஓ.பி.எஸ்ஸும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை  எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு விழாவால் மதுரை மாவட்டமே கொண்டாட்டத்தில் உள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க