வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (14/01/2018)

கடைசி தொடர்பு:09:57 (14/01/2018)

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும் வீரர்களுக்கும் கடுமையான விதிகள்!

கடந்த வருடம் நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவால், இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த வித இடையூறுமில்லாமல் இன்று தொடஙகினாலும்,  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும், கல்ந்து கொள்வோருக்கும்வழக்கத்தை விட அதிகமாக விதிகள் விதிக்கப்பட்டுள்ளதால், இது பாரம்பரியத்தை மாற்றுவது போல உள்ளதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

அப்படி என்ன மாதிரியான விதிமுறைகள்....?

காளைகள் 127 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். கொம்பு 24 செ.மீ.இருக்க வேண்டும். ஆறு பற்களுடன் உடலில் எந்த காயமோ, தழும்போ காளைகளுக்கு இருக்க கூடாது. காளைகளை கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்வார்கள். அவர்கள் அளிக்கும் சான்றிதழ் மூலம் டோக்கன் வழங்கப்படும்.
அதன் பின்பு காளைகளை வாடிவாசல் அருகிலுள்ள பந்தலுக்கு இரவே அழைத்து வந்து விட வேண்டும். அதற்கு தேவையான தீவனம் கொண்டு வரவேண்டும். மாடுகளை நன்கு ஓய்வெடுக்க செய்ய வேண்டும். என்பது போன்ற பல நிபந்தனைகள்.

ஜல்லிக்கட்டு

மாடுபிடி வீரர்களுக்கு வயது 22 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். 50 கிலோவுக்கு மேல் உடல் எடை இருக்க வேண்டும். எந்த நோயும் இருக்க கூடாது. சமீபத்தில் எந்த நோயும் வந்திருக்க கூடாது. ஆதார் அட்டையுடன் விழாக்குழுவிடம் விண்ணப்பம் பெற்று மருத்துவக்குழுவின் சோதனைக்கு செல்ல வேண்டும். உயரம், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகளுக்கு  பின் ஓகே ஆனபின், டோக்கனை வாங்கிக்கொண்டு தருகிற டீ சர்ட்டை அணிந்து கொண்டு வாடிவாசலுக்கு காலையில் வந்துவிட வேண்டும். இதுமட்டுமில்லாமல் இன்னும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் தங்கள் மாடுகளை கலந்து கொள்ள வைக்கவும், மாடு பிடிக்க பதிவு செய்யவும் கடந்த சில நாட்களாக படாதபாடு பட்டார்கள். 

கிராமத்திலுள்ளவர்கள் உயரம் குறைவாகவும், ஒல்லியாக இருந்தாலும் வீர விளையாட்டுகளில் கில்லியாக இருப்பார்கள், இது தெரியாமல் உடல் எடை அதிகமாகவும் உயரமாகவும் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். இங்கே ராணுவத்துக்கா ஆள் எடுக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.

இது மட்டுமில்லாமல்ஐந்து பேர் கொண்ட விலங்குகள் நல அமைப்பினரும் வருகை தந்துள்ளனர். பீட்டா, விலங்குகள் நல வாரியம், பீப்பிள் பார் அனிமல் அமைப்பினர் பார்வையிட வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு தடைக்கு  இந்த அமைப்புகள்தான் காரணம்என்றாலும், தற்போது தடை இல்லை என்றாலும், அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

தற்போது ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதி மன்றத்த நிலுவையில் உள்ளதால் மீண்டும் தடை வாங்க  அதற்குண்டான ஆதாரங்களை திரட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கண்கொத்தி பாம்பாக இந்த குழுவினர் அனைத்தையும் பதிவு செய்ய உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க