வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (14/01/2018)

கடைசி தொடர்பு:11:12 (14/01/2018)

தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி !

திமுக தலைவர் கருணாநிதி பொங்கல் பண்டிகையையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் இன்று தொண்டர்களை சந்தித்தார்.

karunanidhi
 

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி முதல் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். ஒராண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

இதையடுத்து, 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி மற்றும் ஆ.ராசா கடந்த டிசம்பர் 23-ம் தேதி  கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது மகள் கனிமொழி கன்னத்தில் கருணாநிதி முத்தமிட்டார். தன் கண்ணாடியை தன் கைகளாலேயே சரிசெய்தார். இந்தக் காட்சி அருகில் இருந்தவர்களையும் கண்கலங்கச் செய்தது. உடல் நிலைக்குறைவால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த கருணாநிதி, மகளின் விடுதலையைத் தொடர்ந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவருகிறார் என தி.மு.க தொண்டர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இன்று தொண்டர்களை சந்தித்தார்.  கோபாலபுரம் வீடு பிரமாண்டமாக அலங்கரிக்கப்படிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் காலை முதலே வீட்டின் முன் குவியத் தொடங்கினர்.  இந்த சந்திப்பின் போது டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க