“வாழவைத்த தெய்வங்களுக்கு வாழ்த்துகள்!" - ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்திலுள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறினார்.

Rajini

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் “என்னை வாழ வைத்த தெய்வங்களாக தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு முன்பு இன்று அவருடைய ரசிகர்கள் திரண்டனர். அவர்களை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி அமைத்துப் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!