விறுவிறுப்பாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு! - டிவி, ப்ரிட்ஜ் அள்ளும் வெற்றியாளர்கள்

இன்று காலை 8 மணிக்கு தொடஙகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிகட்டுக்கு வந்த மொத்த காளைகள்- 678. பல்வேறு சோதனைகளால் நிராகரிக்கப்பட்ட காளைகள் 57. மீதியுள்ள  621 காளைகளில் 267 காளைகள் களம் இறங்கியுள்ளது.

விறுவிறுப்பாக

ஒரு ரவுண்டுக்கு 75 வீரர்கள் என்ற கணக்கில் இதுவரை 375 வீரர்கள் களம் இறங்கி உள்ளனர்.150 வீரர்கள் காத்திருக்கின்றனர். இதுவரை 2 பேர் காயம்  அடைந்துள்ளனர். 4 மணியுடன் போட்டி நிறைவடைந்துவிடும் என்பதால் தங்கள் காளைகள் இடம்பெறுமா என்ற கவலையில் உரிமையாளர்களும், காளையை அடக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்குமா என்று வீரர்களும் காத்திருக்கிறார்கள். 

கலெக்டர் வீரராகவராவே மேடையில் அமர்ந்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் விதிகளை மைக் பிடித்து அறிவித்து போட்டியை நடத்தி வருகிறார். விதியை கடைபிடிக்காத வீரர் ஒருவர் வெளியேற்றப்பட்டார்.

வெற்றி பெற்ற வீரர்களும், பிடிக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களும் டிவி, ப்ரிட்ஜ், பீரோ, வாஷிங் மெஷின், கட்டில், அண்டா என்று பரிசுகளை அள்ளி சென்றார்கள்.  மருத்துவக்குழு, மீட்புக்குழுவினர் வாடி வாசல் அருகே தயார் நிலையில் இருந்தனர்.மதுரை அரசு மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு வார்டு என்று இன்று மட்டும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!