அம்பேத்கர் சிலை உடைப்பு! முத்தரசன் கண்டனம்

"மோதலை உண்டாக்க வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் சமூக விரோதிகள் டாக்டர் அம்பேத்கர் சிலையை நாசப்படுத்தியிருக்கிறார்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கார்

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியம்,மல்லிகுண்டம் கிராமத்தில் உள்ள டாக்டர்அம்பேத்கர் சிலையை, கொடுவாள் கொண்டு வெட்டி  சிவப்புச் சாயத்தை ஊற்றி, இரத்தம்வடிவது போன்று செய்துள்ளனர். சிலையில்வெட்டிய நிலையில் கொடுவாள் உள்ளது. மோதலை உருவாக்க வேண்டும்என்கிற உள்நோக்கத்துடன் சமூகவிரோதிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மிகவன்மையாக கண்டிக்கின்றது.

இச்சம்பவம் குறித்து இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மேச்சேரி ஒன்றியசெயலாளர் தோழர் காத்தமுத்து மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறை காலதாமதம்செய்யாமல், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்திட வேண்டும். சாதி, மதம்என்கிற பெயரால் வன்முறைகளை தூண்டி மக்களை பிளவுபடுத்தி, மோதவிட்டு குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேடும்முயற்சிகள் மிக வன்மையாக கண்டிக்கதக்கது" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!